சிவகங்கை ஜூன்-30
புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த ஊர் மத்தியில் இருந்த புரவிக்குதிரைகளை தூக்கி வல்ல நாட்டுக்கருப்பர் அய்யனார் கோவில் முன்பு வைத்து குலாலர்கள் சிறப்பு பூஜை செய்தனர். இதில் கண்டவராயன்பட்டியை சுற்றியுள்ள திருப்பத்தூர், தெக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாட்டார்கள், நகரத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அருள்பெற்றனர். கண்டவராயன்பட்டி காவல்துறை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.