ஓசூரில், செங்கம் துணைகாவல் கண்காணிப்பாளரை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Spread the love

கிருஷ்ணகிரி

கடந்த 26 அன்று, சேலம்-சென்னை பசுமைசாலைக்கு எதிர்ப்பு தெரித்து,
அரூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடையே விளக்கி கூறும் வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் சுற்றுவட்டார கிராம வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி தமிழக அரசிற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார், அக்கோறிக்கையை ஏற்ற பொதுமக்கள் வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏற்றினர்,

பின்பு 26 அன்று, ஓட்டலில் உணவருந்திய டில்லிபாபுவை விசாரணை என்ற பெயரில் பொதுமக்களின் முன்னிலையில் அவரது சட்டையைபிடித்து இழுத்து அழைத்து சென்ற செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, அவரை இழிவான வார்த்தைகளை பேசி, அவமானப்படுத்தி மாலை அனுப்பி வைத்துள்ளார்,

இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் அனைத்து தாலூக்காவிலும் துணை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும், தமிழக அரசு பசுமை சாலையை திட்டத்தை கைவிட வேண்டும் என,

கண்டன கோசங்களை எழுப்பினர்,

ஓசூர் இராம்நகரில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் BG மூர்த்தி தலைமை வகித்தார்,

கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100 கும் மேற்பட்டோர் பங்கேற்று மாநில அரசுக்கு எதிராக பேசினர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *