திருமணம் செய்வதாக பள்ளி ஆசிரியையிடம் உல்லாசம் நீதிமன்ற ஊழியர் கைது

Spread the love

திருமணம் செய்து கொள்வதாக கூறி தனியார் ள்ளி ஆசிரியையிடம் உல்லாசம் அனுபவித்த நீதிமன்ற ஊழியரை தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.தேனி அருகே அரண்மனைப்புதூரில் கிழக்குத் தெருவில் குடியிருப்பவர் சன்னாசி. இவரது மகள் திவ்யா(25). இவர் முதுகலைப்பட்டப்படிப்பு மற்றும் எம்.பில் படித்துவிட்டு முத்துத்தேவன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அரண்மனைப்புதூர் முல்லைநகரில் குடியிருப்பவர் ஆண்டவர் மகன் அரவிந்த்(24). இவர் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.ஆசிரியை மற்றும் நீதிமன்ற ஊழியர் இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் பள்ளி ஆசிரியை திவ்யா வீட்டிற்கு சென்று, அவருடன் நீதிமன்ற ஊழியர் அரவிந்த் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வலுக்கட்டாயமாக உல்லாசம் அனுபவித்தாராம். ஆனால், திருமணம் செய்யாமல் நம்பிக்கை மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. நியாயம் கேட்ட திவ்யாவை, அரவிந்த் மற்றும் அவரது உறவினர்கள் வைரமணி, ராஜா ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.இதுகுறித்து திவ்யா தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் அரவிந்த், வைரமணி, ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *