தேனி அருகே இலவச மருத்துவ முகாம்

Spread the love

உத்தமபாளையம் அருகேவுள்ள
ஆனைமலையன்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்,
கடந்த 10 நாட்களாக இராயப்பன்பட்டி, ஆனைமலையன் பட்டி, மற்றும் அணைப்பட்டி ஆகிய சுற்று கிராமங்களில் மர்மக் காய்ச்சலால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தன, வைரஸ் காய்ச்சல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
கை. மற்றும் கால்கள் வீக்கத்துடனும், சிக்குன்குனியா போன்று நடக்க முடியாமல் தவிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர், கோம்பை வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவமனை அதிகாரி வசந்தி பரிபூரணம் தலைமையில் மருத்துவக் குழு பாதிக்கப்பட்டவர்களை, இராயப்பன்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது, கிராம சுகாதார செவிலியர்கள், மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள் வீடு தோறும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, வைரஸ் பற்றி விழிப்புணர்வு வழங்கி வருகிறார்கள், தெருக்களில் கொசு மருந்து ஆட்டோக்கள் மூலம் தெளிக்கப்படுகின்றன, சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில், வட்டார மேற்பார்வையாளர் சக்தி குடிநீர் தொட்டிகள், பொதுக்குழாய்களில் தண்ணீரை சுத்தப்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது. வீடு தோறும் உள்ள பாதுகாப்பற்ற நீரை அப்புறப்படுத்தியும் வருகின்றன,

சிறப்பு மருத்துவ முகாம்,
ஆனைமலையன் பட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று சிறப்பு சோதனை செய்தனர், இந்த முகாமில், கர்ப்பிணிகளுக்குத் தேவையான சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, கண், சர்க்கரை போன்ற நோய் கண்டறிவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, சுமார் 537 பயனாளிகள் சிகிச்சை ஆலோசணைப் பெற்றன, 4 பேர் க்கு கண் அறுவைச் சிகிச்சைக்காக, க, விலக்கு மருத்துதுமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், 35 பேருக்கு சர்க்கரை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும்மருத்துவர்கள் தெரிவித்தார், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், மருத்துவமில்லா மேற்பார்வையாளர்கள் கிராமப்புற சுகாதார செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக உதவியாளர்கள், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான ஆலோசணைகள் அளிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *