முனைவர் க.குமார் தலைமையில்தேசிய கொடியேற்றி கொண்டாடபட்டது

Spread the love

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் குடியரசு தின விழா கோலாகலம்        மாநிலத் தலைவர் முனைவர் க.குமார் தேசிய கொடியேற்றினார்.பள்ளி மாணவர்களுக்கு நோட்புக், ஏழை பெண்களுக்கு சேலை என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது…

70 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைமை அலுவலகமான மந்தவெளிப்பாக்கம் அலுவலகத்தில் இன்று காலை  தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர்க.குமார் அவர்களால் சங்கத்தின் அலுவலகம் முன்பு தேசிய கொடியேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் சுமார் 200 பேருக்கு தலைவர் முனைவர் க.குமார் அவர்கள் மற்றும் மாநில  நிர்வாகிகள் கரங்களால்  நோட்புக் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து சுமார் 100 ஏழை எளிய பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.   ஆண்டுதோறும்    தலைமைச் செயலகம் அனைத்து பத்திரிகை யாளர்கள் சங்கத்தின் சார்பில் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தினம் விழா  நிகழ்ச்சியின் தேசிய கொடியேற்றப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது வழக்கம் அந்த அடிப்படையில் இன்று குடியரசு தின விழா  தலைமைச் செயலகம் அனைத்து பத்திரிகை யாளர்கள் சங்கத்தின் சார்பில்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின்  மாநில பொருளாளரும் போலீஸ் டுடே இதழ் நிர்வாக  ஆசிரியருமான   சி.பி.கிருஷ்ணன்  மாநில அமைப்பு செயலாளரும், தலைமைச் செய்தி செய்தி ஆசிரியருமான எம்.ஆத்திமுத்து, மாநில துணைப்பொதுச்செயலாளரும், போலீஸ் டுடே மாத இதழ்  நிருபருமான  K.நியாஸ் நூருதீன், மாநில செய்தி தொடர்பாளரும்,போலீஸ் டுடே மாத இதழ்  நிருபருமான  S.மணிவண்ணன், மாநில இணை செயலாளர்கள் M.செந்தில்குமார்,

N.குமரன்,S.ஆறுமுகம், தென் சென்னை மாவட்ட தலைவர் C.அசோக் மற்றும் நிர்வாகிகள்,அலுவலக மேலாளர் பா.ராஜேஷ், அலுவலக நிர்வாகி செல்வி.சுவீட்டி,.மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள்,உறுப்பினர்கள், என ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *