உத்திரமேரூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி –

Spread the love

காஞ்சிபுரம்,ஜன.26: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மற்றும் மீனாட்சி அம்மன் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் கமலநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி மாணவர்களுக்கு வாக்காளர் தினத்தின் அவசியத்தை எடுத்துரைத்து வாக்காளர் உறுதிமொழியை முன்மொழிந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த உறுதிமொழி பதாகையில் உறுதிமொழி கையொப்பம் இட்டனர். இந்த பேரணியில் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் மாநில தலைவர் ஜெயராஜ், அறக்கட்டளையின் உத்திரமேரூர் ஒன்றிய தலைவர் பத்மநாபன், மாவட்ட செயலாளர் கௌதம், ஆலோசகர் இள.பாண்டியன், மோகன், தாமரை மணாளன், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் பிரேம், தேர்தல் பொறுப்பு அதிகாரிகள், மீனாட்சி அம்மன் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *