எஸ்.ஆர்.எம் கல்லூரியில் 5 ஆவது சர்வதேச நேனோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கம்…

Spread the love

ஐந்தாவது சர்வதேச நேனோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கத்தை எஸ்.ஆர்.எம் இயற்பியல் மற்றும் நேனோ தொழில்நுட்ப துறை ஜப்பான் ஷிசோகா பல்கலைக்கழகம் , ஜிஎன்எஸ் நியூசிலாந்து, தாய்வான் தேசிய பல்கலைக்கழகம் , சிஎஸ்ஐஆர்  தேசிய இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இந்த சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. 
இக் கருத்தரங்கின் நோக்கம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சிகளை வெளிக்கொண்டு வருவதுதான். இந்த கருத்தரங்கில் பல்வேறு அறிவியல் அமர்வுகள் இடம்பெற உள்ளன எடுத்துக்காட்டாக நேனோ வடிவமைப்பு , நேனோ மின்னணுக்கள் என பல்வேறு உள்ளன.

90க்கும் மேற்பட்ட அறிவியல் அமர்வுகள் பல்வேறு முன்னணி அறிவியலாளர்கள் என அமெரிக்கா  எம்ஐடி , ரென்சல்லேர் தொழில்நுட்ப கல்லூரி , ஜப்பான் ஷிசுக்கோ பல்கலைக்கழகம் மற்றும் தென் கொரியா , ரஷ்யா கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வழங்குவதோடு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான ஐஐடி மதராஸ் , கராக்பூர் , கௌஹாத்தி , ஐஏசிஎஸ் மற்றும் சிஎஸ்ஐஆர் போன்ற நிறுவனங்களும் இணைவது குறிப்பிட்டதக்கது . 

இக் கருத்தரங்கில் 2000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து உள்ளனர். இந் நிகழ்வில் புகழ்பெற்ற அறிவியலாளர் டாக்டர் யஷிஹிரோ அயகாவா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.   டாக்டர் நித்யா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் பெண் விஞ்ஞானி அவர்களுக்கு சிறந்த விஞ்ஞானி விருதும் வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் மல்லிகார்ஜுனா ராவ் அவர்களுக்கு சிறந்த இளம் ஆராய்ச்சியாளர் விருதும் வழங்கப்படவுள்ளது. கருத்தரங்கின் வரவேற்புரை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புலத்தின் இயக்குநர் டாக்டர் முத்தமிழ்ச்செல்வன் அவர்கள் வழங்கினார். அவரை தொடர்ந்து கருத்தரங்கின் நோக்கவுரையை டாக்டர் ஜான் திருவடிகள் வழங்கினார்.

இணை துணை வேந்தர் முனைவர் கணேசன் அவர்கள் , இணைத் துணை வேந்தர் வெளியுறவு பிரிவு டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து பேசினர். சிறப்புரையை அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் சைகல் , டில்லி ஐஎன்எஸ்ஏ திரு அஜெய் ஆகியோர் வழங்கினர். பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் சேதுராமன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தார். நிறைவாக பல்கலைக்கழக தேர்வு கட்டுபாட்டு ஆணையர் டாக்டர் பொன்னுசாமி நன்றியுரை வழங்கினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *