ஆரோக்கிய பாரத பயண நிறைவு விழாவில் தமிழக அரசுக்கு விருது!

Spread the love

இன்று (29.01.2019) புதுடில்லியில் இந்திய அளவில் நடைபெற்ற ஆரோக்கிய பாரத பயண (சுவஸ்த் பாரத் யாத்ரா) நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதினை மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரிடம் வழங்கினார். உடன் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுடான், இ.ஆ.ப., இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத் தலைவர் ரீட்டா டியோட்டியா, இ.ஆ.ப., முதன்மைச் செயல் அலுவலர் பவன்குமார் அகர்வால், இ.ஆ.ப. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *