தேனி :மூதாட்டியை காட்டுமாடு முட்டி படுகாயம்

Spread the love

பெரியகுளத்தில் கூலி வேலைக்கு சென்ற ராக்கம்மாள் 60 வயது என்ற மூதாட்டியை காட்டுமாடு முட்டி படுகாயம் மருத்துவ மனையில் அனுமதி

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பட்டா புளி தெருவைச் சேர்ந்த அமாவாசை ( லேட்) மனைவி ராக்கம்மாள் அவர்கள் முருகமலை நகர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர்க்கு சொந்தமான எலுமிச்சை தோப்பில் கூலி வேலை செய்வதற்கு இன்று அதிகாலை 6 மணிக்கு சென்றுள்ளார். வேலை பார்த்து கொண்டிருந்த போது சுமார் 10 மணியளவில் அந்தப் பகுதியில் சுற்று திரிந்த காட்டுமாடு ஒன்று அவரை தாக்கியது. இதனால் காயமடைந்த அவரை அருகில் வேலை செய்யும் கூலி தொழிலாளர் உதவியுடன் மோட்டர் சைக்கிள் மூலம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அவசர பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி வனத்துறையினர் மற்றும் பெரியகுளம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

பைல் படம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *