படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எஸ் பி மகேஸ்வரன் தகவல்

Spread the love
  1. கும்பகோணம் செய்தியாளர்-தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தெரிவித்தார்பயங்கரவாதம் என்பது களைந்தெறியப்படவேண்டும் , அரசு இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக வின் மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி .

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் நேற்று நள்ளிரவு ராமலிங்கம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் . இதனை தொடர்ந்து திருபுவனம் திருவிடைமருதூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .தஞ்சை சரக காவல் துணை தலைவர் லோகநாதன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திருபுவனம் திருவிடைமருதூர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர் கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி திருபுவனம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று திருவிடைமருதூர் பகுதியில் முகாமிட்டுள்ள தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கொலை குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது .
இச்சம்பவம் தொடர்பாக சிலரிடம் ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது .விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் மகேஸ்வரன் தெரிவித்தார் .

இதேபோல் திருவிடைமருதூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், பயங்கரவாதம் களைந்தெரியப்பட வேண்டும் ,கேரளாவில் நிகழ்ந்தது போல் தமிழகத்திலும் தற்போது மதமாற்றத்தை தடுக்க முயல்வோர் கையை வெட்டும் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது. உடனடியாக இதுபோல் பயங்கரவாதம் தடுத்திட வேண்டும் , குற்றவாளிகள் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழும், அதன் பிறகு என்.ஐ.ஏ விசாரணைக்கும் உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் .மதமாற்றத்தை தடுக்க முயன்றதற்காக இது போல் ஒரு படுகொலை சம்பவம் நடந்து இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கருப்பு முருகானந்தம் மேலும் தெரிவித்தார் .படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது . இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் அமைப்புகளும் பொது அமைப்புகளும் மரியாதை செலுத்தி வருகின்றனர் . படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் உடல் இன்று இரவு தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ராமலிங்கம் படுகொலையை தொடர்ந்து திருபுவனம் திருவிடைமருதூர் பகுதிகளில் பதட்டமான சூழல் தொடர்ந்து நிலவுகிறது . ராமலிங்கம்
மதமாற்றம் செய்பவர்களுடன் நிகழ்ந்த வாக்குவாத வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது இது திருவிடைமருதூர் பகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பேட்டி. , பாஜக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *