பாலிவுட்டில் நடிகர் அக்ஷய் குமார் நடித்த பேட்-மேன்’ (Pad-man) படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

Spread the love
  • பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அக்ஷய் குமார். 1991-ம் ஆண்டிலிருந்து நடித்து வருகிறார். `ஹவுஸ்ஃபுல்’ `சிங் இஸ் கிங்’ `ரவுடி ராத்தோர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த `பேட்-மேன்’ (Pad-man) படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

தமிழில் ரஜினியுடன் இணைந்து 2.0 படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அண்மையில் பிரதமர் மோடியை அக்ஷய் குமார் நேர்காணல் எடுத்திருந்தார். இந்நிலையில் அக்ஷய் குமாரைக் காண அவரின் ரசிகர் ஒருவர், குஜராத் மாநிலத்தின் ட்வார்கா நகரிலிருந்து மும்பைக்கு 900 கி.மீ நடந்தே சென்றுள்ளார். தொடர்ந்து 18 நாள்கள் நடந்து சென்று ஒருவழியாக அக்ஷய் குமார் வீட்டை அடைந்துள்ளார்.
இதைக்கேட்ட அக்ஷய் வியந்து, அந்த ரசிகர் குறித்து தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கதில் அவர், பார்பட் என்பவரை இன்று சந்தித்தேன். அவர், 900 கி.மீ நடந்து வந்து 18 நாள்களில் மும்பையை அடைந்துள்ளார். நமது இளைஞர்கள் லட்சியங்களை அடைய இதுபோன்ற திட்டங்களுடன் செயல்பட்டால் யாரும் தடுக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து மற்றொரு கருத்தையும் பதிவிட்டுள்ளவர், உங்கள் அனைவரையும் சந்திப்பது எனக்கு மகிழ்ச்சிதான். நீங்கள் எனக்கு தரும் அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். ஆனால், இது போன்ற விஷயங்களை செய்ய வேண்டாம் என்பதை நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்… உங்கள் நேரத்தையும் சக்தியையும் உங்களின் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்துங்கள். அதுதான் எனக்கு மகிழ்வைத் தரும். பர்பாட்டுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published.