திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்லில் பாரம்பரிய மிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக திண்டுக்கல் மலைக்கோட்டை விளங்குகிறது இந்த மலையின் உச்சியில் அருள்பாலிக்கும் அபிராமி அம்மன் கோவில் உள்ளது இது இந்துக்களுக்கு பாத்தியப்பட்டதாகவும் இதில் இஸ்லாமியர் சம்பந்தப்பட்ட படங்களை எடுக்க விடமாட்டோம் எனவும் அது இந்து மதத்தை கேவளப்படுத்தும் விதமாக இந்தப்படம் இருப்பதாகவும் இந்து முன்னணி அமைப்பினர் தரப்பில் கூறப்படுகிறது அதன் அடிப்படையில் நேற்று இரவு நடத்த இருந்த படப்பிடிப்பை துவங்க விடாமல் கோஸமிட்டபடி முற்றுகை போராட்டம் நடைபெற்றது
அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் இப்போது கலைந்து செல்லுங்கள் என கூட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
*செய்தியாளர் திண்டுக்கல் மாவட்டம் அழகர்சாமி*