*தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை மக்களின் பலம், ஆசீர்வாதத்துடன் ரஜினி நிரப்புவர்: ஓசூரில் ரஜினியின் சகோதரர் பேட்டி*

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நகர ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில், ரஜினியின் 70வது பிறந்தநாள் விழா நடைப்பெற்றது.

 

இதில் பங்கேற்ற ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, ஏழை எளியோருக்கு தையல் எந்திரம்,சலவை பெட்டி மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒருகிராம் தங்க மோதிரம் உள்ளிட்ட முந்நூறு பேருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேட்டியளித்த சத்தியநாராயண ராவ்:

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக ரஜினி பேசி உள்ளார் அந்த வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியுமா என்கிற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, நிச்சயம் ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியும் மக்கள் பலம், ஆசீர்வாதம் இருக்கிறது தமிழகத்தில் இவர் போல் இனி பிறக்க மாட்டார் ரஜினியை அண்ணாக,அப்பாவாக,தாத்தாவாக நினைக்கின்றனர் மக்கள் ஆசீர்வதிக்க வேண்டும் அவர் வெற்றிடத்தை நிரப்புவார் என பேசினார்,

மேலும் பேசிய அவர் உள்ளாட்சி மன்றத்தேர்தலில் ரஜினி மக்கள் இயக்கம் போட்டியில்லை, அவரின் பெயரை பிரச்சாரத்தில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.

ரஜினி,கமல் இணைவார்களா? என்கிற கேள்விக்கு: அந்த நேரத்தில் இருவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என இவ்வாறு பேசினார்.

நிறைவில் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாரப்பட்டது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published.