தேனி மாவட்டத்தில் ரஜினியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் கோவில்களில் பொங்கல் வைத்தும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள்
திரைப்படத்துறையில் நடித்துவரும் ரஜினி அவர்களின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாவட்ட இணைச்செயலாளர்
ஒச்சாத்தேவர் தலைமையில் அனைத்து கோவில்களிலும், கிறிஸ்தவ ஆலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் அவர் நடித்து வரும் படங்கள் வெற்றி பெறவேண்டும் என்றும் அவருடைய உடல்நலம் நன்றாக இருக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ரஜினி அவர்கள் சீரும் சிறப்புமாக வாழ வேண்டியும் அவர் எண்ணம் போல வாழ வேண்டியும் அவர் நினைத்ததுபோல் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் பல ஆலயங்களிலும் பள்ளிகளிலும் பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கியும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர்கள்