திருச்சியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் இன்று விவசாயிகள் இரத்த கண்ணீர் வடிக்கும் போராட்டம் நடைபெற்றது.

Spread the love

திருச்சி ஜன 04

திருச்சியில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது, 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க கோரியும், உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும், தள்ளுபடி செய்ய மறுக்க கூடாது என்று கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும் உட்பட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 2ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே போராட்ட கோரிக்கைகளை குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவரசுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடிவில் தமிழக முதல்வரை சந்திக்க நேற்று மாலை 6மணிக்குள் அனுமதி
பெற்று தருவதாக ஆட்சியர் உறுதி அளித்தனர். ஆனால் விவசாயிகள் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யாததால் வழக்கம்போல் இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார்.
இன்று விவசாயிகளை ஏமாற்றி இரத்த கண்ணீர் வடிக்க வைத்து விட்டதே தமிழக அரசு என்ற கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

 

பேட்டி :
அய்யாக்கண்ணு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்.

Trichy JK

Print Friendly, PDF & Email