திருச்சியில் மார்வாடி கடைகளை பூட்டு போடும் போராட்டம் – 50க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Spread the love

திருச்சி ஜன 04

தமிழ் தேசியக் கட்சியின் சார்பாக இன்று திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மார்வாடி கடைகளை பூட்டு போடும் போராட்டம் மாநிலத் தலைவர் தமிழரசன் தலைமை நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மார்வாடி கடை ஒன்றை பூட்டு போட முயன்ற போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கு மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் தமிழர்களுக்கு தமிழ்நாட்டின் முன்னுரிமை வழங்க வேண்டும்.

 

தமிழ்நாட்டில் மார்வாடிகள் வந்து ஆட்சி செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது அதனை அழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களே பிழைக்க முடியாது அவர்கள் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை முற்றிலும் ஒழித்திட வேண்டும். பான்பராக் மற்றும் போதைப் பொருள்களை தமிழ்நாட்டில் வந்து விற்பனை செய்யும் மார்வாடி களை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் வாழுகின்ற வணிகர் மக்களுக்கு மார்வாடிகள் தமிழகத்தில் தொழில் தொடங்கி தமிழகத்தில் உள்ள வணிகர்களை ஒழிக்கத் தொடங்கி உள்ளனர். அரசு வேலையும் கூட வட இந்தியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது இந்த நிலையை நீக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை போராட்டத்தில் முன்வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Trichy JK

Print Friendly, PDF & Email