கவிதை:மௌனம்

Spread the love

*மௌனம்*

மௌனம்…
என்பது சிறந்த
ஆயுதம்தான்!
அது யாரையும்
காயப்படுத்தாதவரை

ஆனால்…..
உன் மௌனம்
என்னை காயப்படுத்தி கொண்டிருக்கிறது!

நெஞ்சங்கள்……
பேசட்டும் என
நினைத்து விட்டால்!
வார்த்தை
தன்வாலிபத்தை
இழந்து விடும்

நீ…..நிழலா?
நெருப்பா? என
அரிய பேனாவை
துனைக்கு அழைத்தேன்!

நீ… நிழலாக இருந்தால்
நிம்மதி எனக்கு
நெருப்பாக
இருந்தால்
அது எரிந்து போகட்டும்!

கவிஞர்..
*மன்னை மாயா*

Print Friendly, PDF & Email