கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில் டாப் ஹீரோவான விஜய் 20 நாட்களுக்கு பிறகும் அமைதி காப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிதி அளிப்பது கூட அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் அவர் ஒரு ஆறுதல் வீடியோ, அறிக்கை எதுவும் வெளியிடாமல், இப்படி ஒரு விஷயம் நடக்காதது போலவே அமைதி காப்பது ஏன் என்று புரியாமல் பலர் தவிக்கிறார்கள். குறிப்பாக விஜய் ரசிகர்கள், அஜீத் நிதி உதவி அளித்து விட்ட நிலையில் அவரது ரசிகர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய் குறித்து பல தகவல்களும், வதந்திகளும் தீவிரமாக பரவி வருகிறது. விஜய்யின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் உள்ள திரைப்பட கல்லூரியில் பிலிம் மேக்கிங் படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் அவர் நாடு திரும்ப முடியாத சூழல். இதனால் மகனை எண்ணி மிகுந்த கவலையில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தவிப்பில் உள்ளார். அதன் காரணமாக அவர் எதிலும் தலையிடாமல் தனிமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. விஜய் இதற்கு விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை நிலவரம் புரியும் என்கிறார்கள்.