கவிதை…
மாசில்லாத
காற்றும் ..
தூசியில்லாத
பூமியும்..
புகையில்லாத
வானமும்..
மயக்கமில்லாத மனிதர்களும்..
விபத்தில்லாத சாலைகளும்..
குற்றமில்லாத உள்ளங்களும்..
சிரித்து மகிழும் குடும்பங்களும்..
அடங்கி கிடக்கும் அலமாரிகளும்..
எட்டி பார்க்கும்
ஏழைகளும்..
பயமில்லாமல் சுற்றும் பறவைகளும்..
பூத்து சிரித்து மரணிக்கும் பூக்களும்..
வாழ்க்கை என்ன என்ற சுயகேள்விகளும்..
உண்மையை உரக்க புரிந்து கொண்ட சில மானிடர்களும்…
சுத்தம் சோறு போடும்
என்ற நடைமுறைகளும்..
இறைவனின் வாசல் கதவுகளை மூடி விட்டு..
இயற்கையெனும் வாசற்கதவுகளை திறந்து விட்டாய்..!!!
நீ தான் கொரனாவோ..
வை.ப (எ)வை.பழனிவேலு
கட்டுமாவடி