திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து குணமாகி இன்று 5 பேர் வீடு திரும்பினர்

Spread the love

திருச்சி ஏப் 28

திருச்சி மாவட்டத்தினை சார்ந்த 51நபர்கள் கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 42 நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 3நபர்கள், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2நபர்கள் ஆக மொத்தம் 5 நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தை சார்ந்த 6 நபர்கள், பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த
5நபர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த
1நபரும், அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த
2நபரும் ஆக கூடுதல்
தற்போது 14நபர்கள் மட்டுமே சிகிச்சைப்
பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர்.
குணமாகி வீடு திரும்பிய அனைவரையும்
முதல்வர் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ஏகநாதன் மற்றும்
அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் பணிபுரிந்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், இதர சுகாதராத்துறை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் வாழ்த்து கூறி அனுப்பு வைத்தனர்.

Trichy jk
9894920886

Print Friendly, PDF & Email