தேனி மாவட்டம் போடியில் சுடுகாட்டில் மூட்டை மூட்டையாககொட்டப்பட்டிருந்த அரிசியை மக்கள் அள்ளிச்சென்று சமைத்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்த சம்பவம் பெரும் வைரலாகிவருகிறது.

Spread the love

தேனி மாவட்டம் போடியில் அங்கிருக்கும் சுடுகாடு ஒன்றில் மூட்டை மூட்டையாக அரிசி கொட்டிக்கிடப்பதாக சுற்று வட்டார மக்களுக்கு தகவல் பரவியது. இதனை அடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொட்டிக்கிடந்த அரிசிகளையும், மூட்டை மூட்டையாக அடிக்கிவைக்கப்பட்டிருந்த அரிசியையும் தங்களால் முடிந்த அளவு அள்ளிச்சென்றனர்.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் யாரோ மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்ய இப்படி செய்திருப்பார்கள் என கூறி மக்கள் அங்கிருந்த அரிசியை ஆசையோடு அள்ளிச்சென்றனர்.

இதனை அடுத்து அள்ளிச்சென்ற அரிசியையே சமைத்து பார்த்தபோதுதான் அது கெட்டுப்போன அரிசி என்றும் அரிசியில் புழுக்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. உடனே இந்த தகவல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

Print Friendly, PDF & Email