#பெண்களின்_வலி…

Spread the love

பிறந்து பத்து வயதுவரை அவளை கவனிக்காத அவளுக்கான சுதந்திரம் வாழ்க்கை அதன் பின் அவள் மாறும் வாழ்க்கையும் வலிகளும்….!

போதும் ஆண்களுடனான விளையாட்டும் பேச்சும் என
முதல் கட்டுப்பாடு…!

பெண்களைப்போல் வீட்டில் இரு வெளியில் செல்லாதே என சொல்லும் முதல் வார்த்தை….!

அதன் பின் தாயின் கவனிப்பில்
பல கட்டுப்பாடு தந்தையின் பார்வையில்
தெரிந்து வாழ்ந்து அண்ணணின் கண்கானிப்பில் வளர்ந்து.
அவளது குழந்தை பருவம் நிறைவடைகிறது….!

பருவம் எனும் அவளது இன்னோரு பரிமாணம் அவள் பெண்மை எனும் இன்னோரு உலகத்தில் முதல் நாளில் இருந்து தொடங்குறது அவளின்
முதல் வலி…….!

ஆடைகளை சரிபார்த்தே அவளின் நேரமும் நாட்களும் மிக அதிகமாக
பெண் சதைகள் மட்டுமே உலகம் என்று வாழும் சில ஆண்களின் விஷ பார்வைகளில் இருந்து தப்பிக்க அவள் படும் வேதனை நிறைய…..!

அழகானவள் பேரழகி தேவதை சூப்பர் பிகர் என்று பேர்எடுக்கும் அவர்களின்
வலி….!

மாதம் தோறும் வரும் பெண்ணின் இயற்கை தந்த மாற்றத்தின் மாதவிடாய் வலிகள் இது வார்த்தைகளில் எழுதும் வலிகள் அல்ல சொன்னாலே போதும் அவர்கள் படும் சிரமங்கள்.
தாயிடமும் சினேகிதியிடமும் தவிர வெளியே சொல்லமுடியாமல் அவர்கள் படும் வலி கண்ணீரின் பெண்மை…..?

பெண் என்றால் காதலிக்க வேண்டும் என்பது தான் என்று கட்டாயபடுத்தும் பல நிஜ ரோமியோக்களிடம் இருந்து விலகி நடக்க வேண்டும்…

இதில் கட்டாயமாக காதலிக்க வேண்டும்
விருப்பம் இல்லை என்றாள் பலநேரம
மரன பய வலிகள் சில நேரம் மறுத்தால் உயிர்போகும்…

திருமணம் எனும் அடுத்த பரிமாண வாழ்க்கை ஆரம்பம் இதுவரை ஒடிவிளையாடிய துள்ளி திரிந்த பிறந்த வீட்டை மட்டும் அல்ல உடன் பிறந்தவர்களையும் பெற்று எடுத்த பெற்றவர்களையும் பிரிந்து வர வேண்டும் அந்த பிரிவின்கடைசி நாளிள் வரும் கண்ணீர் இத்தனை வருடங்கள் அவர்களுடன் வாழ்ந்த பாசத்தின் ரத்த துளிகள்…

தாய்மை எனும் அடுத்த பரிமாணம்
பிரசவ வலி மாதங்கள் பத்து சுமந்த வலிகளே ஒரே நாளில் சில நேரங்களில் அவள் படுவாள் அந்த வலிகளே…..!

உயிரே குடுத்து உயிர்தந்து மரணமே தன் கண்ணில் தெரிந்து மூச்சும் வேகமாக இதயதுடிப்பும் மிகவேகமாக அந்த வலியே சொல்லமுடியாமல்
வார்த்தைகள் இன்றி தனது வலிகளே
ஒரு குரலில் மட்டுமே வெளிபடுத்துவாள்
அந்த நேரம் பெண்ணாக பிறந்ததை ஏன் எதற்கு என்று அவள் பெற்றெடுத்தவுடன் அவள் விடும் ஒரு துளி கண்ணீர் சொல்லும் மிகபெரும் வலிகளோடு….

இதை பார்க்கும் கடவுளுக்கும் கண்ணீர்வரும்….?

பெண்…!
தாய் தந்தையின் கட்டுக்குள் இருந்து
சகோதரனின் கண்காணிப்பில் வளர்ந்து
கணவனின் கஷ்டங்களை ஏற்று
அவனின் காலம் எல்லாம் அவனின் தேவை அறிந்து பணிவிடைகள் செய்து
பெற்று எடுத்த பிள்ளைகளின் நினைத்து
அவர்களின் எதிர் காலமே தனது உலகம் என்று வாழ்ந்து தனக்கென்று எதுவுமே
இல்லாமல்

தனதுஒரேஆசையான
#தீர்க்கசுமங்கலி எனும்
ஒரே வார்த்தைக்காக வாழும் அவளின் வாழ்க்கை வலிகள் அவளது தியாகங்கள் விட்டுக் கொடுத்த விஷயங்கள் என அனைத்தும் இந்த உலகத்திற்கு தெரிந்தும் தெரியாமலும்….?

அவள் இந்த உலகில் நல்ல பெண் என்று
பெயர் எடுக்க அவள் பல தடைகளை தாண்ட வேண்டும்..

ஒரு ஆணுக்கு அவனது உடலே பலம்
ஒரு பெண்ணுக்கு அதுவே பலமும் அதுவே பலவீனம் பெண்ணாக பிறப்பவள் அவளது உடலை
மறைத்தே வாழ்கிறாள் இறுதிவரை
இது எல்லாருக்கும் தெரியும்…

அவளை பற்றிய வலிகள் இந்த உலகில் அவள் கண் மூடி மண்ணில் மறையும் வரை தெரியாதது…

அவள் உடலை மட்டும் அல்ல
அவளது பல வலிகளையும் மனதில் வைத்து அவள் கண்மூடி மறைத்து இறந்து போகிறால் இறுதிவரை யாருக்கும் தெரியாமல் மண்ணில் மறைந்து..

பெண் என்பதன் முழு அர்த்தம்
வலிகளின் உயிரினம்
அவளை அடிமையாக நடத்தவும் வேண்டாம் அவளை தலையில் தூக்கி வைக்கவும்வேண்டாம்….

அவளின் ஒரே தேவை எதிர்பார்ப்பு
அவளின் உணர்வுகளை புரிந்து கொள்வது மட்டுமே ஒரு பெண்ணிற்கு நாம் தரும் மிகபெரும் ஆறுதல் அவளின் மனதே காயப்படுத்தாமல் இருப்பது தான்

ஒரு பெண்ணே அவளது உடல் காமத்திற்கும் முகம் ரசிப்பதற்கும் மட்டும் அல்ல அதையும் தாண்டி அவளது வலிகளை உணர்வுகளே
புரிந்து கொள்வதற்கும் தான்
இந்த உலகில் ஆண் இனம்
படைக்கபட்டு இருக்கிறது….!

இது வரை பூமியில் பிறந்த பெண்களுக்கும் இனி பூமியில் பிறக்க போகும் பெண்களுக்கும் இந்த எனது பதிவு சமர்பணம்…

எனக்கு உயிர் தந்த உடல் தந்த வாழ்க்கை தந்த பெண் எனும் புனித இனத்திற்கு நான் தரும் சின்ன மரியாதை….. ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published.