கவிதை:-உறங்காத மனம்

Spread the love

உறங்காத மனம்
இரும்புத்திரை போட்டு
வைத்தாலும்
கடந்து செல்லும் மனிதர்கள்
பேசும் வார்த்தைகள்
நெருப்பாய் போனதால்
நெஞ்சம் உருகுகிறது….
காயப்பட்ட மனதிற்கு
ஆறுதலாய்
கடுஞ்சொற்களை
கூற நினைத்தாலும்
மழையாய் வந்த
கண்ணீர்
மறைக்கிறது….
பச்சோந்தி மனிதர்களின்
நிறம் அறியாது
கண்களும்
குருடாய்ப் போனது…
ஏய்… என் மனமே
ஒதுங்கிப் போ
இல்லை
உறங்கிப் போ
நிரந்தரமாய்…..

அன்புடன்

ராகவி சென்னை

Print Friendly, PDF & Email