மாறுமா இந்த அவலங்கள்?

Spread the love

மனைவியைத் துன்புறுத்தி,
மகனைக் காயப்படுத்தி,
உறவுகளை உதாசீனப்படுத்தி,
மானத்தை அடகு வைக்கும்
மானக்கேடுகள்…
அரங்கேறும்
மேடையாய்ப் போனது
டாஸ்மாக்குகள்……
கால்வயிறு கஞ்சிக்கு
கதியில்லை
எனும் மனைவியின்
சொல்லைக் கேளாமல்,
பாழாய்ப் போன
மதுவிற்காக,
மனைவியின் தாலியையும்,
அடகு வைக்கத் துணியும்
இந்த இரண்டு கால் மிருகங்கள்
நாட்டுக்கும் வீட்டுக்கும் பாரமே!
பள்ளிக்கூடம்
போகும் வயதில்,
அப்பாவின் போதையால்
தடுமாறிய குடும்பத்தை
தூக்கி நிறுத்த
சுமைதூக்கும் தொழிலாளியாய்
மாறிப்போன
மகன்.


தனக்கு ஏதாவது
தின்பண்டம்
வாங்கித் தருவார்
எனக் காத்திருக்கும்,
மகளுக்கு
இரண்டு மது பாட்டில்களை,
வாங்கி வரும்
அப்பாவின் செய்கை
ஏமாற்றமே….
கணவனோடு
சேர்ந்து உண்ண
நினைக்கும் மனைவிக்கு
பரிசாய்க் கிடைத்தது
என்னமோ….
குடிகாரக் கணவனின்
அடியும், உதையும்
மாறுமா? இந்த அவலங்கள்!!

ராகவி சென்னை

Print Friendly, PDF & Email