அப்பா அம்மாவின் கவிதை

Spread the love

அப்பா அம்மாவின் தியாகம் அகிலம் அறியும் அப்பாவின் தியாகம் யார அறிவார்
அழ அழஅடிப்பாள் அம்மா அடித்தற்காய் துடித்து அழுவது அப்பா மட்டுமே
இல்லத்தில் எல்லோரும் உறங்கிய பின்னும் இதயம் துடிக்க அழுவது அப்பா மட்டுமே குடும்ப வெகுமானம் காக்க அவமானம் சுமந்தவன் அப்பா துடிக்க தெரிந்த ஆன்மா நடிக்க தெரியாத எப்பாவி அம்மாவின் அறுவை சிகிச்சையின் வடுக்கலை விட அப்பாவின் கையில் உள்ள ரணங்கலின் வலி அதிகம்
அம்மா கோபுர கலசம்
ஆனால் அப்பா
கோபுரத்தையே தாங்கும் அஸ்திவாரம்
அஸ்திவாரங்கள் அலட்டி கொள்வதில்லை இறைவனால் வரமாய் வந்தவள் அம்மா
இறைவனே வரம் தரும் கடவுளாய் அப்பா நம் பெற்றவர் பெருமையை மற்றவர் போற்றும் முன் அன்னையர் தினம் போல் அப்பாவையும் கொண்டாடி மகிழ்வோம்
சுஜித்தா நாராயணசாமி
திருச்சி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *