கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பேருந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் உள் ஒதுக்கீடு என்ற பெயரில் அருந்ததியர் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள 3 % முன்னுரிமை ஒதுக்கீட்டை ரத்து செய்து சட்டப்பாதுகாப்புடன் தனி இடஒதுக்கீடு 6 % வழங்கிட வேண்டியும் அருந்ததியர் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ஆதித்தமிழர் என ஒரே பெயரில் அரசாணை வெளியிட வேண்டியும் தமிழக அரசை வலியுறுத்தி ஆதித்தமிழர் முன்னேற்ற கழக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்நடராஜன்,மாநில துணை பொதுசெயலாளர் செல்வகுமார், மாவட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கொளஞ்சி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.