பரபரப்பு :-தூத்துக்குடியில் தனது மனைவியுடன் உள்ள தொடர்பை துண்டிக்க மறுத்தாவரை கொலை செய்த சகலை

Spread the love
தூத்துக்குடி: ஜூலை; 21 தூத்துக்குடியில் கள்ளக்காதலில் சகலையை வெட்டிக்கொன்ற மற்றொரு சகலையை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.  
தூத்துக்குடி எட்டயாபுரம் சாலையில் உள்ள KTC நகரைச் சேர்ந்த மகேந்திரன் இவரது மகன் பிரேம்குமார் (29). இவர் ஆட்டோ ஓட்டுநர்.இவரது மனைவி கௌசல்யா (25). இந்த தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கௌசல்யாவின் உடன் பிறந்த சகோதரி மகேஸ்வரி(23),இவரது கணவர் விக்னேஷ்வரன் (30). இவர் தூத்துக்குடியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். மகேஸ்வரிக்கும் பிரேம்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை மகேஸ்வரியின் கணவர் பழ வியாபாரி விக்னேஸ்வரன் கண்டித்தும்  அவர்களுக்குள் கள்ளக்காதல் தொடந்துள்ளது.
இதை கண்டிக்க KTC -நகர்  பிரேம்குமார்க்கு  வீட்டிற்குச்  சென்று கண்டித்துள்ளார். அப்பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பு ஏற்பட்டு விக்னேஸ்வரன்  ஆத்திரமடைந்து பிரேம்குமாரை வீட்டிற்கு வெளியே வரவழைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன்,எஸ்.ஐ முத்துகணேஷ்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி குற்றவாளியை உடனே கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து , தலைமறைவான பழ வியாபாரி விக்னேஷ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.  
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *