ADMK வில் புதிதாக 29 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: EPS மற்றும் ops ஆகியோர்களால் நியமிப்பு

Spread the love
சென்னை:அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அ.தி.மு.க. நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டும், கட்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சில மாவட்டங்களை, புதிய மாவட்ட கழகங்களாகப் பிரிக்கப்பட்டு, பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும், மாவட்ட கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள், கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மாவட்டம், உள்வரும் சட்டமன்ற தொகுதிகள், மாவட்ட கழக செயலாளர்கள் விவரம் வருமாறு:
காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி) முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம். செங்கல்பட்டு கிழக்கு
மாவட்டம் திருப்போரூர், மதுராந்தகம் (தனி), செய்யூர் (தனி) திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்
தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன். சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர், ஆலந்தூர் கே.பி.கந்தன்.
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி (தனி), கும்மிடிபூண்டி சிறுணியம் பி.பலராமன். திருவள்ளூர் மத்திய மாவட்டம் மதுரவாயல், பூந்தமல்லி (தனி) அமைச்சர் பா.பென்ஜமின். திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அம்பத்தூர், ஆவடி வி.அலெக்சாண்டர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம், திருவொற்றியூர் மாதவரம் வி.மூர்த்தி. திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி பி.வி.ரமணா.
வேலூர் மாநகர் மாவட்டம் வேலூர், காட்பாடி எஸ்.ஆர்.கே.அப்பு. வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் (தனி), கீழ்வைத்தியணான்குப்பம் (தனி), அணைக்கட்டு த.வேலழகன். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் அமைச்சர் கே.சி.வீரமணி. ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, அரக்கோணம் (தனி) சு.ரவி.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மைலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி அமைச்சர் சி.வி.சண்முகம். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) இரா.குமரகுரு.
கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), சூலூர்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கோவை மாநகர் மாவட்டம் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர் அம்மன் கே.அர்ச்சுணன். கோவை புறநகர் வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், அவினாசி (தனி) பி.ஆர்.ஜி.அருண்குமார்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர் கப்பச்சி டி.வினோத்.
திருச்சி மாநகர் மாவட்டம் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, துறையூர் (தனி) அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர், முசிறி எம்.பரஞ்ஜோதி. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி ப.குமார்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், கீழ்வேலூர் (தனி), வேதாரண்யம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி (தனி) வி.ஜி.கே.செந்தில்நாதன்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), பழனி முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன். திண்டுக்கல் மேற்கு மாவட்டம் திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்.
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் தச்சை என்.கணேசராஜா. தென்காசி வடக்கு மாவட்டம் கடையநல்லூர், சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி) சி.கிருஷ்ணமுரளி. தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி, ஆலங்குளம் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன்.
கட்சி அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உள்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும், சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கட்சிப் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உள்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *