போலிகளின் நடமாட்டம்

Spread the love

யாரை சொல்வது குறை என்று தெரியவில்லை.எதை நம்பி
பிழைப்பது என்று தெரியவில்லை.போலிகளின் சாம்ராஜ்யம் எங்கும்.
இன்றுதான் காக்கிச்சட்டை அணிந்து பெண் ஒருத்தி தன்னைக் காவலர்
எனக் காவலரிடமே பொய் சொல்லி மாட்டிக்கொண்டாள்.இன்று
போலி மருத்துவன் கைது என்று படித்ததும் நெஞ்சம் பகீரென்றது.
மருத்துவரிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று சொல்ல
கேள்விப்பட்டிருக்கிறோம். இன்றைய நிலைமை நாம் சந்திக்க இருக்கிற
மருத்துவன் அசலா அல்லது போலியா என்ற ஆராய்ச்சிக்குப்
பிறகே நம் உடல் பிரச்சினைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது
என்றால் அதை விடக் கொடுமை என்ன இருக்கிறது.
வழக்கறிஞர்களில் போலி, ஆசிரியர்களில் போலி, இன்ஜினியர்களில்
போலி என்று போலிகளின் நடமாட்டத்தால் அசல் தன்னை
முழுமையாக மறைத்துக் கொண்டது.தாய் தந்தையில் மட்டும்தான் போலி
இல்லை ஏனென்றால் நானே கடவுள் என்று சொல்லி ஒரு கூட்டம்
போலித்தனத்தை என்றோ அரங்கேற்றிவிட்டது.பயம் பற்றிக்கொள்ள சொல்கிறேன் போலிகளை காணும் இடங்களெல்லாம் கண்டு என் மேலே
எனக்கு சந்தேகம் எழும் போலிருக்கிறது.நான் அசலா போலியா என்று

ராகவி சென்னை

Print Friendly, PDF & Email