4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நாடு தழுவிய அளவில் சமூக இடைவெளியுடன் அறவழி ஆர்ப்பாட்டங்கள்!!!!!

Spread the love

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்!
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் பயாஸ் அஹ்மத் மற்றும் வேலூர் மாவட்ட செயலாளர் அ கெளவுஸ் கலந்து கொண்டனர்.
இதில் 50 பேர் கைது ஆனார்கள்.பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நாடு தழுவிய அளவில் சமூக இடைவெளியுடன் அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும், முத்தலாக் தடைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்காமல் நல்ல நிர்வாகத்தை வழங்கிட வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நாடு தழுவிய அளவில் இந்த அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆற்காடு நகர SDPI கட்சி தலைவர் J. முஹம்மத் இல்யாஸ் தலைமையில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *