திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 40ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அவரை அழைத்து சென்ற போதுதிருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்ததில்ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவேலு,காவலர்கள் யேசுதாஸ் மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ஆண்டு தோறும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வீரமரணம் அடைந்த 4 காவல் துறையினருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று வீரமரணம் அடைந்த 4 காவல்துறை அதிகாரிகளுக்கு 40ஆம் ஆண்டு வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.

இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி,வடக்கு மண்டல டி.ஐ.ஜி.காமினி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கடந்த 39 வருடங்களாக நேரில் அஞ்சலி செலுத்தி வந்த தேவாரம் அவர்கள் இந்த ஆண்டு காணொளி காட்சியின் மூலம் வீரமரணம் அடைந்த 4 காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *