முத்தமிழ் கலைஞருக்கு புகழ் அஞ்சலி

Spread the love

இயற்கைக்கு தெரியாது திருக்குவளையில் அஞ்சுகதாயின் கருவறையில் இன்னொறு சூரியன் உதிக்கும் என்று
சூரியனுக்கு கைகொடுத்து நிலவுக்கு அரசியல் சொல்லி கொடுத்த அஷ்ட்டாவதனி
உன் பேனா
குனிந்தபோதெல்லாம்
ஒரு தலைமுறையை தலை நிமிர செய்தவன்
உன் சாதனையை நீயே முறியடித்தால் தான் உண்டு
பிறர் முயற்ச்சிக்கும் முன்னே
முச் சற்று போனார்கள் பெரியாரும் அண்ணாவும் கண்டெடுத்த காலம் தந்த கலைஞர் என்னும் காவியகல்வெட்டு உழவனின் ஏர்முனைக்கு நிகரானது உன் பேனாவின் கூர்முனை
நினைவஞ்சலி என்று யார் சொன்னது
உலக அரியலில் புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்தவனின் புகழ் அஞ்சலி என மாற்றி கொள்ளுங்கள்
உன்னை நினைக்க மாட்டோம் என்பது நிஜம் மறந்தால் தானே மறுபடி நினைக்க …..
நீ ஆளும் காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பதே பெருமை

நீங்கா நினைவுகளுடன்
இந்திரா நாராயணசாமி திருச்சி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *