மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றிய நிலையூர்1வது ஊராட்சி கூத்தியார்குண்டு பகுதியில் கலைஞர் கருணாநிதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் திருப்பரங்குன்றம் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் உமாதேவி போத்திராஜ், ஒன்றிய பொருளாளர் கருணாநிதி, கருவேலம்பட்டி வெற்றிவேல்,முன்னாள் நிர்வாகி பாண்டி , தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகுராஜா மற்றும் கிளைகழக முன்னோடி ராசு, ராஜாக்கண்ணன், முருகன், அய்யங்காளை, சுந்தர கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.