திருச்சி:திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எப்ப பவர் வரும் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி பேச்சு

Spread the love

திருச்சி:தி.மு.கவிலேயே பவர் இல்லாத மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் மத்தியில் அவருக்கு எப்படி பவர் வரும் என்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி பேசினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, அந்தநல்லூர் ஒன்றிய கழகத்திற்குட்பட்ட முத்தரசநல்லூர், ஜீயபுரம், பெட்டவாய்த்தலை, எட்டரை, சீராத்தோப்பு மற்றும் பனையபுரம், கிளிக்கூடு, உத்தமர்சீலி ஆகிய பகுதிகளில் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியில் கழக ஆட்சியை சிறப்பாக நடத்திவரும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதோடு, அம்மா காட்டிய வழியில் தொலைநோக்கு பார்வையோடு எண்ணற்ற பல புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதனால் கழக நிர்வாகிகள் மத்தியிலும், தமிழக மக்களிடத்திலும் நாளுக்கு நாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு பெருகி வருகிறது.

இதனால், 2021-ம் ஆண்டில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிதான் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கழக ஆட்சி மீது குறை கூறும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 6 மாத காலமாக செய்துவரும் அரசியல் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எவ்விதக் காரணமும் இன்றி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாதத்திற்கு ஒரு ஆர்ப்பாட்டம் அறிவிக்கும் மு.க.ஸ்டாலின் தன் வீட்டிற்கு வெளியே வந்து 15 நிமிடம் கருப்புக்கொடி ஏந்தியவாறு பத்திரிகைகளுக்கும், மீடியாக்களுக்கும் போஸ் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று விடுகிறார். இதுதான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆறு மாதமாக செய்துவரும் மக்கள் பணியாக உள்ளது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் இடைவிடாது மக்கள் பணி ஆற்றிவரும் கழக ஆட்சியை அகற்றி விட்டு தமிழக முதலமைச்சராக வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவு கனவாகத்தான் இருக்குமே அல்லாது, அவரது பகல் கனவு ஒருநாளும் நிஜமாகாது. 2021-ம் ஆண்டு கழகம் தான் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.

தி.மு.க நிர்வாகத்தில் அனைத்து முடிவுகளையும் அவரது மனைவியும், மகன் உதயநிதிஸ்டாலினும் தான் எடுக்கிறார்கள் என்பதை சமீபத்தில் தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினர் கு.க.செல்வம் வெட்டவெளிச்சமாக மீடியாக்களுக்கு பேட்டி அளித்தது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
இந்தப் பேட்டியின் மூலம் தி.மு.கவில் மு.க. ஸ்டாலினுக்கு எந்தவித பவரும் இல்லை என்பதை தமிழக மக்கள் மட்டுமின்றி தி.மு.கவில் உள்ள அனைவரும் நன்றாக புரிந்து கொண்டுவிட்டனர். இதனால் ஸ்டாலினை நம்பி அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்ற தி.மு.க மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய எதிர்காலம் குறித்து மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

தி.மு.கவிலேயே மு.க.ஸ்டாலினுக்கு பவர் இல்லை என்கிற பொழுது தமிழக மக்கள் மத்தியில் அவருக்கு எப்படி பவர் வரும். இதனால் தி.மு.கவில் உள்ள மூத்த நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிக்கு செல்லலாமா என்று ரகசிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பெருகி வரும் செல்வாக்கால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலோடு மு.க.ஸ்டாலின் தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலை உருவாகும்.

எனவே, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கழக அரசு நிகழ்த்தியிருக்கும் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா கூறியதை போல கழகம் இன்னும் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடுகின்ற ஆணைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகின்ற சிப்பாய் களாக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கழக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைக்கும் வகையில் பணியாற்ற நாம் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி பேசினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான எஸ்.வளர்மதி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன், கழக பொதுக்குழு உறுப்பினர் பிரியாசிவக்குமார், ஒன்றிய கழக செயலாளர் ஆர்.அழகேசன், பொருளாளர் ஆர்.வீரமுத்து, திருச்சி புல்லட்ஜான், மீனவரணி மாவட்டச்செயலாளர் பேரூர் என்.கண்ணதாசன், திருவளர்ச்சோலை கூட்டுறவு சங்கத்தலைவர் பனையபுரம் எஸ்.கர்ணன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளரும், ஸ்ரீரெங்கநாதா கூட்டுறவு பண்டகசாலை துணை தலைவருமான ஆர்.மருதை, துறையூர் நிலவள வங்கித்தலைவர் எஸ்.கே.சாமி, ஒன்றிய கழக இணைச்செயலாளர் மகேஸ்வரிசுப்ரமணியன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எட்டரை தா.அன்பரசு, தோப்பு என்.நடராஜன், திருப்புகழ் செல்லதுரை, வார்டு கழக பிரதிநிதி எஸ்.பி.செந்தில், டி.ஆர்.நவனி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *