கண்டிக்கின்றோம்..!! கண்டிக்கின்றோம்..!!* ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றது

Spread the love

கடந்த 15-8-2020 அன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், திருமதி.அமிர்தம்.. 74-வது சுதந்திர தினவிழா அன்று தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதால், ஊராட்சி மன்ற பெண் தலைவர் தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது…. என்ற தகவல் நமது செய்தியாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த நிலையில் அதை நமது செய்தியாளர்கள் செய்தியாக நாளிதழில் வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து நமது ஊடக உறவு புதிய தலைமுறை செய்தியாளர் அவர்கள் அந்த சம்பவம் சம்பந்தமாக ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் செய்தி சேகரிக்கச் சென்று உள்ளார். அவர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது ஊராட்சி செயலாளர் சசிகுமார் புதிய தலைமுறை செய்தியாளர் அவர்களை தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல், மிரட்டலும் விடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் விஜயகுமார் மற்றும் சில குண்டர்களால் செய்தியாளர் எழிலை தாக்கி கைபேசியை பிடுங்கிக்கொண்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்திலே சிறை வைத்தது வேதனை அளிக்கும் செயல். இச்செயலைச் செய்த குண்டர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு அல்லாமல் அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்தமைக்கு ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருவள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கும்மிடிப்பூண்டி துணைக் கண்காணிப்பாளர், காவல்நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

74-வது சுதந்திர தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்த குற்றச்செயலை புரிந்தவர்கள் மீதும் செய்தி சேகரிக்கச் சென்ற நமது செய்தியாளரை சிறைப்பிடித்த சசிகுமார், விஜயகுமார் மற்றும் அவர்களோடு இருந்த குண்டர்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்ததிற்கு ஊடக உரிமைகுரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காவல்துறையை பாராட்டுகிறோம்..

ஊடக தோழன்.
வி.எம்.தமிழன் வடிவேல்.
பொதுச் செயலாளர்.
ஊடக உரிமைக் குரல்.
பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம்.
9445272820,7904654776.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *