பாடகர் SPB க்கு ஓரு கூட்டு பிரார்த்தனை கவிதை

Spread the love

இசை உலகின்
தவிர்க்க இயலா
மூன்றெழுத்து மந்திரமே
சுயம்புவாய் தோன்றி
குரலின் வழியே காற்றை காதலித்த கலை உலகின் தலைமகனே
உயிர் எழுத்துக்கும் உயிர் ஊட்டியவனே மூச்சு விடாமல் பாடி எங்களை மூச்சடைக்க செய்தவனே இன்று நீ மூச்சு விட இயலாமல் தவிக்கும் போது எங்களின் மூச்சு காற்றும் தடுமாறுகிறதே
அறுபதை கடந்தும் இருபதின் எனர்ஜியாய் கொஞ்சும் குரல் குழந்தை மனதுடன் வளரும் பாடகர்களின் தாயுமானவனாய் நீ பாடும் போது நாட்கள் தென்றலாய் கடந்தது – இன்று நொடிகள் யாவும் இதயம் கனத்து தடுமாறி போகின்&றாம் எழுந்து வா பாடு நிலாவே _ இயற்கைக்கும் மகிழ்வில்லை இதயத்திலும் மகிழ்வில்லை உன் குரல் கேட்காமல் குயிலுக்கும் தூக்கமில்லை கூட்டு பிராத்தனை என்றும் தோற்றதில்லை
மூன்றெழுத்து மந்திரமே – நீ இறைவனால் ஆசீர்வதிக்கபட்ட வன்
காலம் கடந்தும் இன்னும் நூறு ஆண்டு பாடும் பறவையாய் இசை வானில் சிறகடிப்பாய் மூன்றெழுத்து மந்திரமே இறைவனின் அருளோடும் இயற்கையின் ஆசியோடும் …..

உன் குரலின் ரசிகன்
இந்திரா நாராயணசாமி திருச்சி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *