பேராவூரணியில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க கூட்டம்.நலவாரிய அட்டை வழங்க கோரிக்கை

Spread the love
 
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஏஐடியுசி சார்பில் மாட்டுவண்டி  தொழிலாளர்கள் சங்ககூட்டம் நடைபெற்றது.
பேராவூரணி ஆவணம் சாலை கே.ஓ.பி படிப்பகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கே.எஸ்.முருகேசன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கவிஞர் பா.பாலசுந்தரம்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றிய செயலாளர் து.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் வ.ராஜமாணிக்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மு.சித்திரவேலு, வட்டாரச் செயலாளர் பிரகாஷ் மற்றும்  மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்துகொண்டு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சார்பாக நலவாரிய அட்டை வழங்க வேண்டுமெனவும்,பேராவூரணி பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்ன ஆவுடையார்கோவில் காட்டாற்றில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்ல சாத்தியமில்லை என்பதால் பேராவூரணி அருகிலுள்ள ரெட்டவயல் அம்புலி ஆற்றிலும், கட்டயங்காடு அக்னி ஆற்றிலும் மணல் அள்ள முறையான அனுமதி பெற்று குவாரி அமைத்து மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *