பஞ்சமி நிலம் மீட்க கோரி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

Spread the love

 

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே பஞ்சமி நிலம் மீட்க கோரி ஆதி திராவிடர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் இந்துசமய அறநிலைத்துறை, வக்போர்டு கிறிஸ்தவ மிஷினரி சொத்துக்கள் இன்றளவும் தமிழக அரசால் பாதுகாத்து கொடுக்கப்படுகிறது. அதுபோல பட்டியல் இன மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம் மீட்பு குறித்து எதிர்வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெற விருக்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியும், நிலம் மீட்பை தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டுமென்றும்,   பஞ்சமி நிலம் குறித்த  வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமென்று ஒட்டுமொத்த தமிழக பட்டியல் இன மக்கள் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் முன்னேற்ற கழகத்தின் சேதுபாவாசத்திர ஒன்றிய செயலாளர் கொள்ளுக்காடு சரவணன்  தலைமையில் பொறியாளர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய இந்திரஜித்  முன்னிலையில் ராஜ கிருஷ்ணன் ராஜசேகர்                இரா சூர்யா முத்துகிருஷ்ணன் குனாசக்திவேல் ஆகியோர்  ராஜாமடம் தலைமை  அஞ்சலகத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை தாங்கிய அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *