ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின்  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Spread the love

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின்  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 26-9-2020 மாலை 3 மணி அளவில் கொளத்தூர் குமரன் நகர் தபால் நிலையம் ஒட்டியுள்ள மஹாலில் நடைபெற்றது.* *இக்கூட்டத்தில் நமது சங்கத்தின் வளர்ச்சி குறித்தும்,* *பத்திரிகையாளர்களின் நலனை குறித்தும், விவாதித்து நிர்வாகிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்று. சங்கத்தின் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல கீழ்க்கண்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.*

*தீர்மானம் ஒன்று:-*

*ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் வளர்ச்சிக்காக சந்தா மற்றும் நன்கொடையை முறைப்படுத்துதல்,தமிழகம் முழுவதும் மாதந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய உறுப்பினர்களை சேர்த்தல், மாவட்ட அளவிலான காலியாக உள்ள பொறுப்புகளை உடனடியாக நியமித்தல்,சங்க சட்ட திட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்களை அப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினலிருந்தும் நீக்குவது என்று  ஏகமனதாக தீர்மானிக்கப்படுகின்றது.*

*தீர்மானம் இரண்டு:-*

*பல மாவட்டங்களில் நமது உறவுகளான பத்திரிகையாளர்களை தாக்குவதும், பொய் வழக்கு போடுவதும்,குண்டர்களால் மிரட்டுவதும்தொடர் கதையாக உள்ளது.இதைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம்  கொண்டு வரவேண்டும்.*

*தீர்மானம் மூன்று:-*

*கொரோனா காலங்களில் இறந்த பத்திரிகையாளர்களுக்கு நிதியுதவி அளிப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.அதேப்போன்று வருமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட  பத்திரிகையாளர்களுக்கு நிதி வழங்கிட வேண்டும்.*

*தீர்மானம் நான்கு:-*

*தலைமை செயலகத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மாத இதழ் மற்றும் பருவ இதழ்களுக்கான  அரசு அங்கீகார அட்டை , அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாத இதழ் மற்றும் பருவ இதழ் நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.*

*தீர்மானம் ஐந்து:-*

*பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் , நலவாரியம் அமைத்து பத்திரிகையாளராகிய  எங்கள் குடும்பங்களை கருத்தில் கொண்டு சிறப்பு திட்டம் ஏற்றப்பட வேண்டும்.அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வீட்டுவசதி/குடிசை மாற்று  வாரியத்தின் அடிப்படையில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட வேண்டும்.*

*இந்த ஐந்து தீர்மானங்களையும் தமிழக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சர், செய்தி துறை இயக்குநர் ஆகியோர் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் ஐந்து தீர்மானங்களையும் நிறைவேற்றி பத்திரிகையாளர் நலனில் தமிழக அரசு என்றும் உள்ளது என்பதை நிருபிக்க வேண்டும் என்று ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.*

*இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஊடக உரிமைக் குரல் மகளிரணி மாநில தலைவி பிரியா குருநாதனின் கணவர் குருநாதன் மற்றும் மக்கள் ஆணையம் மாத இதழின் ஆசிரியரான முத்தையா  தந்தை கருப்பன் மற்றும் புகைப்பட கலைஞர் தாஸ் போன்றோர்களுக்கு ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வரவேற்புரையாக கொளத்தூர் நண்பன் ஆசிரியரும் , மாநில அமைப்புச் செயலாளருமான சத்யா  அனைவரையும் வரவேற்று பேசினார்.அவரைத் தொடர்ந்து சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த கட்ட முயற்சி குறித்தும் மாநில தலைவர் ஜீபிடர் ரவி  பேசினார்.*
*பொதுச் செயலாளர் தமிழன் வடிவேல் பேசுகையில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல்,நமது சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.*
*பிறகு**பொருளாளர்* *நரி.அரி.கிருஷ்ணமூர்த்தி * *பேசுகையில் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் நிதி ஆதாரம் முக்கியம் என்பதையும் அதைப் எப்படி சரி செய்யலாம் என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.அதைத் தொடர்ந்து மாநில மகளிரணி அமைப்புச் செயலாளர்* *.கண்மனி, மாநில சட்ட ஆலோசகர் .ஜான்சிராணி, மாநில ஆலோசகர் .ராசு முருகேசன், மாநில துணை செய்தி தொடர்பாளர் .ஜேம்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தலைவர் .செல்வம், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட  செயலாளர் .ரவி,* *ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பொருளாளர் .ஜெயச்சந்திரன்,வட சென்னை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ராஜன்,தென் சென்னை மாவட்ட தலைவர் ஜெயராமன்,* *ஊடக உரிமைக் குரல் சங்கத்தின் அலுவலக உதவியாளர் .சக்தி மாரியப்பன்,ஸ்ரீதர்,நந்தகுமார்,பவித்ரா, இருதயராஜ்,கவிராஜன், சுசீந்திரன், நவின் குமார் போன்றவர்கள் கலந்துக் கொண்டு ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் வளர்ச்சிகள் , நோக்கங்கள் பற்றி ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது.*
*நிறைவாக நன்றியுரையை மாநில மகளிரணி அமைப்புச் செயலாளர்  .கண்மணி  அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.*

*வி.எம்‌.தமிழன் வடிவேல்.*
*பொதுச் செயலாளர்.*
*ஊடக உரிமைக் குரல்.*
*பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம்.*
*சென்னை.*
*கைப்பேசி:9445272820,7904654776.*

Print Friendly, PDF & Email