ராகுல் காந்தியை தடுத்த உ.பி. போலிஸ் 

Spread the love

உத்தரப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற போது பாதியில் தடுத்து நிறுத்தியது ஏன்? என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்._*

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்._

*_அவரது குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரப்பிரதேசம் வந்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தினர்._*

_அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ”உத்தரப்பிரதேசத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு ஏன் பாதி வழியில் தடுத்து நிறுத்தினார்கள். காவலர்கள் தடியடி நடத்தினார்கள். என்னை தரையில் தள்ளினார்கள். இந்திய நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மோடி மட்டுமே சாலையில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டுமா? சாதாரண மக்கள் நடக்கக் கூடாதா? எங்களது வாகனம் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. அதனால் நாங்கள் நடைபயணமாக ஹாத்ராஸ் நோக்கி புறப்பட்டோம்” என்று ராகுல்காந்தி கூறினார்._

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *