திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சந்தேகத்தால் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் காவல் வாகனத்தை முற்றுகையிட்டு அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!!

Spread the love

 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மணிக்கள் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த விஜயசாந்தி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்கள் இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் நான்கு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருந்து வருகிறது அப்பொழுது ராமமூர்த்தி தனது மனைவி சாந்தி மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி அடித்து உதைத்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் பலமுறை அடித்து தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் மீண்டும் ராமமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பேசி சமாதனப்படுத்தி அவர்களை வாழ வைத்து வந்துள்ளனர் விஜயசாந்தியின் உறவினர்கள் தனது உறவினர்களுடன் பேசினாலும் அவர்களுடன் கள்ள தொடர்பில் இருக்கிறாயா என்று கேட்டு அடித்து உதைத்த தாக உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் இருப்பினும் கடந்த மாதம் 29 ஆம் தேதி ராமமூர்த்தியுடன் சேர்ந்து ராமமூர்த்தியின் தாயாரும் விஜயசாந்தியை அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது அன்றைய தினம் விஜயசாந்தி பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறி கணவர் ராமமூர்த்தி செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது இருப்பினும் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்ததால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் ஆனால் விஜயசாந்தி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் உயிரிழந்த தகவலை விஜயசாந்தியின் வீட்டாருக்கு தெரியப்படுத்தாமல் இருந்து வந்தது அவருடைய உறவினர்களிடையே மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது இந்நிலையில் தனது மகளை சந்தேகத்தால் ராமமூர்த்தியும் அவரது தாயாரும் அடித்து உதைத்து துன்புறுத்தி உயிர் போகும் நிலையில் தாக்கி வாயில் விஷம் ஊற்றி கொலை செய்து விட்டதாக கூறி ராமமூர்த்தி மற்றும் அவரது தாயாரை கைது செய்யக்கோரி மேல்செங்கம் காவல் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் நிலையத்தில் சரணடைய வந்த ராமமூர்த்தியை காவல்துறையினர் காவல் வாகனத்தில் ஏற்றிய போது அவரை இறக்கி விடக் கோரி விஜயசாந்தியின் உறவினர்கள் காவல் வாகனத்தின் முன்பு படுத்து ராமமூர்த்தியை கொண்டுசெல்ல விடமாட்டோம் அவரனுக்கு நாங்களே தண்டனை கொடுப்போம் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது விஜயசாந்தி உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனை தொடர்ந்து ராமமூர்த்தி மேல்செங்கம் காவல்துறையினர் விசாரணைக்காக செங்கம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

அதன் பிறகு செங்கம் பெங்களூர் சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தன் மனைவி மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு கொடுமை செய்து வந்த ராமமூர்த்தி மற்றும் அவர்களின் தாயார் மீது திருவண்ணாமலை கோட்டாட்சியர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் உத்தரவாதம் அளித்ததின் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர் தன் மனைவி மீது சந்தேகம் வைத்து கொடுமைப்படுத்தி அடித்து உதைத்து நான்கு மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு விஜயசாந்தி உயிரிழந்துள்ளார் தற்பொழுது ராமமூர்த்தியின் சந்தேகப் புத்தியால் தாயை இழந்து நான்கு மாத பச்சிளம் பெண் குழந்தை மற்றும் மூன்று வயது பெண் குழந்தை ஆதரவற்ற நிலையில் இருந்து வருகிறது தன் மனைவி மீது சந்தேகம் வைத்து அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக நான்கு மாதம் பச்சிளம் குழந்தையை விட்டுவிட்டு விஜயசாந்தி உயிரிழந்த நிகழ்வால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காவல்துறையினர் கொலையா தற்கொலையா என விஜயசாந்தி கணவர் ராமமூர்த்தி இடம் மேல்செங்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்
J.எபினேசர் பிரின்ஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *