மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் தொமுச மின்வாரிய சேர்மனுக்கு கடிதம் போனஸ் பேச்சு வார்த்தை விரைவில் துவக்கும்படி, மின் வாரியத்திற்கு தொமுச கோரிக்கை விடுத்துள்ளது.

Spread the love

திருப்பூர் அக் 15

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் தொமுச மின்வாரிய சேர்மனுக்கு கடிதம்

போனஸ் பேச்சு வார்த்தை விரைவில் துவக்கும்படி, மின் வாரியத்திற்கு தொமுச கோரிக்கை விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் அ.சரவணன் தமிழக
மின்வாரிய தலைவர் மற்றும் மேலான்மை இயக்குநர் அவர்களுக்கு அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 12,000 அதிகாரிகள் உள்பட 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இதில், ஒப்பந்த தொழிலாளர்களாக 10,000 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த தீபாவளிக்கு மின்வாரிய தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் 3 மற்றும் 4-ம் நிலை ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் 10,000 பேர் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.

ஊரடங்கு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொருட்படுத்தாமல் மின் ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் தினசரி பணிகளுக்கு வந்தனர் ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்து, உயிரிழந்த ஊழியர்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை.

தீபாவளிக்கு, ஒரு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளது எனவே போனஸ் நிர்ணயம் தொடர்பான பேச்சு வார்த்தையை மின்சார வாரிய நிர்வாகம் உடனே நடத்த நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு 30 சதவீதம் போனஸ் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை, நவம்பர் 14 ல் வருகிறது ஆண்டுதோறும் தீபாவளி நெருக்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தி பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன் தான் போனஸ் தொகை அறிவிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படுவதில்லை. இந்த முறை விரைவாக பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கருத்துகளையும் ஏற்று போனஸ் தொகையை மின்வாரியம் வழங்க பரிந்துரைக்க வேண்டும். இம்மாத இறுதியில் போனஸ் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் போனஸ் தொகை, தொழிலாளர்களுக்கு பயன் உள்ளதாக அமையும்.

மின்வாரியத்தில் பணி நிரந்தரம் வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் எவ்வளவோ போராடி வருகின்றனர் இந்நிலையில் தீபாவளி கருணைத் தொகை போன்ற ஆறுதலைக் கூட கொடுக்க மறுப்பது என்ன நியாயம் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பாரபட்சமின்றி தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை உடனடியாக வழங்கிடவேண்டும்.

மின்வாரியத்தில் தன்னுயிரையும் தன் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் மின்வாரியத்தில் இரவு பகலாக பாராமல் தன்னுயிரை பணயம் வைத்து தொடர்ந்து உழைத்து வரும் 10,000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வரும் சூழலில் கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் திபாவளி பண்டிகையின் போது மின்வாரியம் தொழிலாளர்களை வஞ்சித்து உண்மையை மூடி மறைத்து மின்வாரியத்தில் வெறும் 18 ஒப்பந்த தொழிலாளர்கள் தான் இருக்கிறார்கள் என்று பொய்யான தகவல்களை கூறி அவர்களுக்கு மட்டுமே போனஸ் என்று அறிவித்து கடந்த ஆண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் வயிற்றில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எதிர் வரும் நவம்பர் 14-11 -2020 ம் தேதி திபாவளி பண்டிகையெட்டி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க வேண்டும் சென்ற ஆண்டை போல் கடைசி நேரத்தில் அடையாளம் காண முடியவில்லை என்று ஏதேனும் காரணங்களை கூறாமல் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் திபாவளி போனஸ் மற்றும் கருணை தொகை வேண்டும் என்று மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *