பேராவூரணியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா 500 மரக்கன்றுகள் வழங்கல்

Spread the love
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல், நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பொறியாளர்களை கௌரவித்தல் என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் கே.இளங்கோ தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் அ.சந்தோஷ் வரவேற்றார்.
திருச்சி ஜேசிஎஸ் அழகப்பன் முன்னிலை வகித்தார். லயன்ஸ் முன்னாள் ஆளுநர் ஜே.கார்த்திக்பாபு , வட்டாரத் தலைவர் திருவள்ளுவன், முன்னாள் மண்டலத் தலைவர் எஸ்.கே.ராமமூர்த்தி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
விழாவில், வீரியங்கோட்டை, மரக்காவலசை, அம்மையாண்டி, சேதுபாவாசத்திரம், ருத்திரசிந்தாமணி ஆகிய 5 ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் தலா 100 மரக்கன்றுகளும், நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு தலா 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது. மேலும், பொறியாளர்களை பாராட்டி, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள், லயன்ஸ் சங்க செயலாளர் குமார் என்ற பழனிவேல், சாசனத் தலைவர் நீலகண்டன், நிர்வாகிகள் ஜெய்சங்கர்,  மைதீன்,   வ.பாலசுப்பிரமணியன், பெஸ்ட் குமார், உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர். நிறைவாக பொருளாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
செய்தி :
டி.திருஞானம்,
பேராவூரணி.
9360202527
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *