திருப்பூர் போயம்பாளையம் பழனிச்சாமி நகர் ரேசன் கடையில் முறைகேடாக 80 லிட்டர் சீமெண்ணை விற்பனை பொது மக்கள் அவதி நேற்று 09 ம் தேதி ஜெராக்ஸ் குடும்ப அட்டைகளை கொண்டு 40 போலி சீமெண்ணை ரசீதுகள் மூலம் 80 லிட்டர் சீமெண்ணையை கள்ளசந்தையில் விற்பனை செய்து மோசடி

Spread the love

திருப்பூர் அக் 20
செவ்வாய்க்கிழமை

திருப்பூர் போயம்பாளையம் பழனிச்சாமி நகர் ரேசன் கடையில் முறைகேடாக 80 லிட்டர் சீமெண்ணை விற்பனை பொது மக்கள் அவதி

நேற்று 09 ம் தேதி ஜெராக்ஸ் குடும்ப அட்டைகளை கொண்டு 40 போலி சீமெண்ணை ரசீதுகள் மூலம் 80 லிட்டர் சீமெண்ணையை கள்ளசந்தையில் விற்பனை செய்து மோசடி

தொடரும் ரேசன் பொருட்கள் கடத்தல் நேற்று மாலை சுமார் ஐந்து மணியளவில் பழனிச்சாமி நகர் ரேசன் கடையில் மூன்று மூட்டை ரேசன் அரிசியை கடத்தி செல்லும் வீடியோ காட்சிகள் இங்குள்ள விநாயகர் கோவிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த விஷயம் வெளி வந்ததால் தற்போது விநாயகர் கோவில் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை அழிக்க பெண் விற்பனையாளர் முயற்சி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஒரே நாளில் 40 ஜெராக்ஸ் குடும்ப அட்டைகளை கொண்டு போலியாக சீமெண்ணை வழங்க ரசீது போட்டு மோசடிகள் நடந்துள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ரேசன் கடைகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் தில்லுமுல்லுகளை தவிர்க்க பயோமெட்டரிக் கைரேகை பதிவு முறையை இந்த மாதம் 1 ம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. இதன் காரணமாக ரேசன் பொருட்களை கடத்தி கள்ளசந்தையில் விற்பனை செய்வது குறைந்தது ஆனால் அதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தற்காலிகமாக பயோமெட்டரிக் கைரேகை பதிவு முறையை நிறுத்தப்பட்டுள்ளது .
தற்போது இதை பயன்படுத்தி குடும்ப அட்டைதாரர்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகளை பெண் விற்பனையாளர் தனது செல் போன் மூலம் போட்டோ எடுத்துக் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் இல்லாமலே ரேசன் பொருட்களுக்கு ரசீது போட்டு மோசடிகளில் ஈடுபட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

திருப்பூர் மாநகரம் செட்டிபாளையம் சொசைட்டிக்கு போயம்பாளையம் பகுதியிலுள்ள பழனிச்சாமி நகர் ரேசன் கடையிலுள்ள பெண் விற்பனையாளர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தபோதும் சம்பந்தப்பட்ட குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்கில் செயல்பட்டு வந்த நிலையில்.

தற்போது மீண்டும் பழனிச்சாமி நகர் ரேசன் கடையில மோசடி நடந்துள்ளது.

போயம்பாளையம் பழனிச்சாமி நகர் ரேசன் கடை பெண் விற்பனையாளர் மற்றும் நந்தா நகர் பகுதியை சேர்ந்த குப்புசாமி ஆகியோர் தொடர்ந்து ரேசன் அரிசி, சர்க்கரை, சீமெண்ணை உள்ளிட்ட பல்வேறு ரேசன் பொருட்களை கடத்தி சட்டவிரோதமாக கள்ளசந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள் என்பது குறித்து சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் நேற்று 19-10-2020 திங்கட்கிழமை பழனிச்சாமி நகர் ரேசன் கடையில் பெண் விற்பனையாளர் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதாந்திர சீமெண்ணை ஊற்றி வினியோகம் செய்துள்ளார். ஆனால் சிலருக்கு மட்டுமே சீமெண்ணை ஊற்றி வினியோகம் செய்யப்பட்டது. மற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு சீமெண்ணை வழங்கப்பட வில்லை என்று புகார் எழுந்தது.
இந்த தகவல் இப்பகுதிகளிலுள்ள பொது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.

இது குறித்து பழனிச்சாமி நகர் ரேசன் கடை அருகிலுள்ள நபர்களிடம் கேட்டபோது பழனிச்சாமி நகர் ரேசன் கடையில் மாதாந்திர சீமெண்ணை மாதந்தோறும் 160 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 லிட்டர் வீதம் 320 லிட்டர் சொசைட்டியில் வழங்கப்படுகிறது .
அதில் இங்குள்ள பெண் விற்பனையாளர் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்காமல் கள்ளசந்தையில் விற்பனை செய்து வருகிறார்.
அதற்கு உதாரணமாக நேற்று 19-10-2020 திங்கட்கிழமை இந்த ரேசன் கடையில் மாதாந்திர சீமெண்ணை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது 160 ,குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 லிட்டர் வீதம் மொத்தம் 320 லிட்டர் வழங்க வேண்டும் ஆனால் இங்குள்ள பெண் விற்பனையாளர் சுமார் 120 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே 240 லிட்டர் வழங்கி விட்டு சீமெண்ணை அனைவருக்கும் ஊற்றி வினியோகம் செய்யப்பட்டது என்று கூறினார். இதனால் இப்பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறகு நேற்று மாலை சுமார் 04.30 மணியளவில் பெண் விற்பனையாளர் பாக்கி உள்ள மாதாந்திர சீமெண்ணை வழங்க வேண்டிய ( 40 ரேசன் கார்டுகள் ) குடும்ப அட்டைதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பழனிச்சாமி நகர் ரேசன் கடைக்கு வராமலே பெண் விற்பனையாளர் தன்னிடம் ஏற்கனவே உள்ள போலி ரேசன் கார்டுகள் ( குடும்ப அட்டை ஜெராக்ஸ்) கொண்டு போர்ஜரியாக பில் போட்டு 40 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 லிட்டர் வீதம் மொத்தம் 80 லிட்டர் சீமெண்ணை வழங்கப்பட்டதாக மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதனால் நேற்று மாலை இப்பகுதிகளிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு சீமெண்ணை வழங்காமலே சீமெண்ணை வாங்கியதாக குடும்ப அட்டைதாரர்கள் செல் போன் எண்ணிற்கு மெஜெஜ் சென்றுள்ளது. இதனால் சிலர் உடனடியாக பழனிச்சாமி நகர் ரேசன் கடைக்கு நேரில் சென்று பெண் விற்பனையாளரிடம் கேட்டபோது மெஜெஜ் தவறாக தங்களுக்கு வந்துள்ளது என்றும் அடுத்த மாதம் சீமெண்ணை கூடுதலாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகமும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளும் உரிய விசாரணை மேற்கொண்டு மேற்படி பழனிச்சாமி நகர் ரேசன் கடையில் நடந்துள்ள மோசடிகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் நேற்று 19 ம் தேதி மாலை 04.00 மணிக்கு மேல் போடப்பட்ட அனைத்து சீமெண்ணை ரசீதுகளையும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் நேரில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழக்கம் போல் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு மூடி மறைக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்
.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *