திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் நிர்வாகிக்கு புதிய ஸ்கூட்டர் மின்சார வாரிய தொமுச வில் சிறப்பாக தொழிற்சங்க பணிகளை செய்து வரும் செயலாளர் அ .சரவணனுக்கு புதிய ஸ்கூட்டர் திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் வழங்கப்பட்டது

Spread the love

 

திருப்பூர் அக் 22
வியாழக்கிழமை

திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் நிர்வாகிக்கு புதிய ஸ்கூட்டர்

மின்சார வாரிய தொமுச வில் சிறப்பாக தொழிற்சங்க பணிகளை செய்து வரும் செயலாளர் அ .சரவணனுக்கு புதிய ஸ்கூட்டர் திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் வழங்கப்பட்டது.

திமுகழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் நல்லாசியுடன் தொமுச பேரவை அகில இந்திய பொது செயலாளர் மு.சண்முகம் .எம்.பி. அவர்களின் ஆலோசனை படி, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழக செயலாளர் க.செல்வராஜ் அவர்களின் வழிகாட்டுதல்படி தொமுச பேரவை மாநில துணைச் செயலாளர் டி. கே .டி. மு .நாகராசன் அவர்கள் திருப்பூர் மாவட்ட மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ஈ.பி. அ.சரவணனுக்கு புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் வழங்கினார்.
இதில் அமைப்பு சாரா தொமுச நிர்வாகிகள் நித்தியானந்தம், பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மின்வாரியத்தில் எந்த மூலையில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டாலும் இரவு பகல் பாராமல் உடனடியாக நேரில் சென்று அனைத்து வகையான உதவிகளையும் செய்து வரும் சரவணன் இந்த புதிய ஸ்கூட்டர் பெற்ற பிறகு இன்னும் பல தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் , அவரது தொழிற்சங்க பணிகள் சிறக்க தொமுச மாநில துணைச் செயலாளர் வாழ்த்து தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *