சேலம் அருகே சகோதரியின் திருமணத்திற்கு சென்ற வாலிபர் உட்பட 3 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்..

Spread the love

சேலம் மாவட்ட செய்தியாளர் குமரவேல்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில் பட்டியை சேர்ந்த ஜெகதீசன் தனது சகோதரியின் திருமணத்திற்காக நண்பர்கள் கார்த்திகேயன் மற்றும் பார்த்தசாரதியோடு இருசக்கர வாகனத்தில் வந்தனர். இவர்கள் மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் பார்த்தசாரதி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களோடு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஜெகதீசன் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரியின் திருமண வைபவத்திற்காக சென்றபோது நேர்ந்த விபத்தில் வாலிபர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *