ராணிப்பேட்டை பாலாற்றில் வெள்ளப்பெருக்கு,உபரி நீர் வெளியேற்றம் அமைச்சர் வீரமணி மலர்தூவி வரவேற்றார்

Spread the love

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வந்தது. இந்த கனமழை காரணமாக ராணிப்பேட்டை பாலாற்றில் 40 ஆயிரம் கன அடிக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதன் பிறகு தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து நிவர் புயலின் காரணமாக கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால் ராணிப்பேட்டை பாலாற்றில் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதந் காரணமாக வாலாஜாபேட்டையில் உள்ள ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தடு படையானது ஒரு லட்சத்தி 70 ஆயிரம் கனஅடி தாங்கக்கூடிய அளவு கொண்டது தற்போது அந்த ஆணை முழுவதுமாக நிரம்பி நீரானது வெளியேறி வருகின்றன.
வாலாஜா தடுப்பு அணையில் இருந்து மதகுகள் வழியாக காவேரிபாக்கம் மகேந்திரவாடி தூசி சக்கரமல்லூர் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு 4500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தற்போது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு கொள்ளளவை எட்டி உள்ள வாலாஜா தடுப்பணைகளை இன்று (27.11.2020) வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் திரு. கே. சி வீரமணி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனை பார்வையிட்டு மலர்களை தூவி வணங்கி நீரினை வரவேற்றார்கள்.
இதனை தொடர்ந்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் திரு.கே.சி. வீரமணி அவர்கள் பேசியதாவது..
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்திய காரணமாக கடந்த காலங்களை காட்டிலும் இந்த தடவை பெரும் பாதிப்புகள் இல்லாத அளவிற்கு தடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும்
தமிழக அரசும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கடந்த காலங்களில் காட்டிலும் தற்போது புயலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களை மாவட்டம் முழுவதிலும் 125 முகாம்கள் அமைக்கப்பட்டு அது 5,000 மேற்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகள், மருத்துவ வசதிகள் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.
மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கால்நடைகள், குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், காங்கிரீட் வீடுகள், என ஒரு சில இடங்களில் மட்டும் சிறிய அளவில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாகவும் எந்த ஒரு மனித உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவித்தார்.
மாவட்டம் முழுவதிலும் புயலால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை நிவாரண உதவிகளை செய்து வருவதாக தெரிவித்தார்.
512 ஏக்கர் நெல் பயிர் மற்றும் 62 ஏக்கர் நிலக்கடலை பயிர் 13 ஏக்கர் உளுந்து பயிர்கள் என கனமழையால் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளன.
மேலும் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தேவையான அனைத்து விதமான நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டும் என தெரிவித்தார்.
மேலும் புயலின் தாக்கம் இன்னும் குறையாது நிலையில் மக்கள் யாரும் ஆற்றுப்படுகையின் அருகே வசிக்கயோ அல்லது செல்லவோ வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அமைத்துக் கொடுத்துள்ள முகாம்களில் ஆற்றுப்படுகைகளின் ஓரம் வசிக்க கூடியவர்கள் தங்கி கொள்ளலாம். மேலும் வாழை,நெல், பயிர் சேதம் பற்றி இன்னும் முழுமையான கணக்கெடுப்பு தகவல் வந்தவுடன் பயிர் சேதம் குறித்து நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
உடன் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எ.மயில்வாகனன்,மாவட்ட வருவாய் அலுவலர் ம. ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க. இளம்பகவத் இ.ஆ.ப., மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி, வாலாஜா வட்டாட்சியர் பாக்கியநாதன் வருவாய் ஆய்வாளர் சோனியா மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *