மின்துறை அமைச்சர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசிய மின் துறை அமைச்சருக்கு தொமுச கண்டனம்

Spread the love

திருப்பூர் நவ 28

மின்துறை அமைச்சர் பேச்சுக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு

உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசிய மின் துறை அமைச்சருக்கு தொமுச கண்டனம்

நிவர் புயல் சேதம் குறித்த பேட்டியில் மின்வாரிய குறித்து உண்மைக்கு புறம்பானது பலவற்றை மின் துறை அமைச்சர் பேசியுள்ளார் இதற்கு மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் செயலாளர் அ.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மின் வாரியத்தின் பதவிகள் அனுமதிப்பது தனி நபரின் விருப்பம் அல்ல! பதவியின் அவசியம் அதை வாரிய கூட்டத்தில் வைத்து விவாதித்து முடிவு செய்த பின்னரே பதவிகள் அனுமதிக்கப்படும் அப்படி அனுமதிக்கப்பட்ட பதவிகளை தன்னிச்சையாக ரத்து செய்து அப்பணிகளை ஒப்பந்த முறையில் செய்ய வைத்து தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை தொமுச கடுமையாக எதிர்க்கிறது.

மின்வாரியத்தில் புதிய இணைப்பு மின் கம்பங்கள் டிரான்பார்மர்கள், மின் தடை சரிசெய்தல் போன்ற பணிகளுக்கு ஏற்கனவே உள்ள சீ. எல், டி.சி.எல், மஸ்தூர், எல்பர், வயர்மேன், போன்ற பதவிகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் சுமார் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடந்த 15 ஆண்டுகளாக இப்பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் தான் பணிபுரிந்து வருகிறார்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று பணிநிரந்தரம் செய்ய உத்தரவு பெற்றனர் இந்நிலையில் எதையும் மதிக்காமல் இந்த அதிமுக அரசும் மின்வாரியமும் தொழிலாளர் விரோத போக்கில் செயல்பட்டு தமிழக வரலாற்றில் இல்லாத பதவி கேங்மேன் என்ற பதவியை ஒன்றை உருவாக்கி 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 07 ம் தேதி மின்வாரியம் வெளியிட்டது இதை எதிர்த்து திருப்பூர் மாவட்ட தொமுச உயர் நீதிமன்றத்தில் கேங்மேன் பதவியை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

தமிழக மின்வாரியத்தியத்தை ஒவ்வொரு பகுதியாக தனியாருக்கு ஏலம் விட்டு உத்தரவு போட்டு வரும் சேர்மன் உள்ளிட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்கி அவர்களின் செயலை முடி மறைப்பது அதை பேட்டியாக அளிப்பது அவர்களை பாதுகாக்க முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்வது தமிழக மக்களையும் மின்வாரிய தொழிலாளர்களையும் ஏமாற்றும் ஒரு மோசடி செயலயாகும்.

தமிழகத்தில் நான்கு துணை மின் நிலையங்கள் தற்போது தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது
இது குறித்து அப்போது பேசிய மின் துறை அமைச்சர் சில சங்கங்கள் நேரடியாக பணிநியமனம் கோரினர். நாங்கள் முடியாது என்றதால் நீதிமன்றம் சென்றுள்ளனர், விரைவில் வழக்கை முடித்து 10 ஆயிரம் கேங்மேன் எடுக்கப்படும் என்றும் 10 கேங்மேன் பணிநியமனம் செய்யப்படாததால் தான் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக துணை மின் நிலையங்களை தனியாருக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளர், போர்மேன் உள்ளிட்ட பதவிகள் தான் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை எடுத்து வரும் நிலையில் அதை மூடி மறைக்க முன்னுக்குப்பின் முரண்பாடாக மின் துறை அமைச்சர் பேசியுள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த வழக்கில் எங்களது தொழிற்சங்கம் சார்பில் முன் வைத்துள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டு, ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்து நீதிமன்ற வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து பணி நியமனத்தை எப்போதோ வழங்கி இருக்க முடியும் ஆனால் மின்துறை அமைச்சர் இப்படி தான் பல மாதமாக சொல்லி வாய்தா வாங்கி வருவது மக்களையும் வாரிய பணிக்காக காத்திருப்பவர்களை ஏமாற்றும் செயலாகும்.

அதே நேரத்தில் மின்வாரியத்தை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையை மிக தீவிரமாக செய்து வரும் மின்வாரிய சேர்மன் பல்வேறு முறைகளில் ஆள்குறைப்பு மற்றும் புதிய பதவிகளை அனுமதிக்காமல் நிராகரித்து உத்தரவு போட்டு வரும் நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களையும் புதிய ஆட்களையும் எடுக்க தடையாக, முட்டுக்கட்டையாக இருப்பதை மூடி மறைக்க, நீதி மன்றத்தை காரணம் காட்டி அனைத்து தவறுகளையும் மூடி மறைத்து பேசி வருகிறார்.

தனியாருக்கு துணை மின் நிலையங்களை ஒப்பந்தத்திற்கு விட்டுள்ள துணை மின் நிலையங்களை பராமரிக்க உதவி செயற்பொறியாளர், உதவி மின் பொறியாளர் , சிறப்பு நிலை போர்மேன் உள்ளிட்ட பதவிகளோடு ஒரிரு வயர்மேன், எல்பர் போன்ற பதவிகளே தவிர கேங்மேன் பதவி எடுக்காததால் தான் துணை மின் நிலைய பணி ஒப்பத்திற்கு விடப்படுகிறது என்று மின்துறை அமைச்சர் பேசியது துணைமின் நிலையத்தில் எந்த பதவியில் உள்ளவர்கள் பணியாற்றுகின்றார்கள் என்பது கூட அமைச்சருக்கு தெரியாமல் தனியாருக்கு ஒபந்தம் போட உத்தரவிடப்பட்டுள்ள இந்த நான்கு துணை மின் நிலைய உத்தரவுகளும்
கேங்மேன் பதவியை நிரப்பினால் ரத்து செய்யப்படும் என பக்கத்தில் உத்தரவு போட்ட மின்வாரிய சேர்மனை வைத்துக்கொண்டே இப்படி சம்மந்தம் இல்லாமல் பேசியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த நான்கு துணைமின் நிலையங்கள் இயக்கத்துக்கும் பராமரிப்புக்கும் ஒப்பந்தப்படி அனுமதிக்க வேண்டிய போர்மேன், மின் பாதை ஆய்வாளர், வயர்மேன், கள உதவியாளர் பதவிகளையும், வாரிய உத்தரவுபடி அனுதிக்க வேண்டிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி மின் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளையும் சேர்மன் அனுமதிக்காமல் நிராகரித்து உள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த நான்கு துணை மின் நிலைய இயக்கத்துக்கும் பராமரிப்புக்கும் கேங்மேன் பதவிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாத நிலையில் தனியாருக்கு விட உத்தரவிட்டதற்கு கேங்மேன் பதவியை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை தான்.

ஆள் பற்றாக்குறை இடைக்கால ஏற்பாடு என்று சொல்லும் அமைச்சரதற்போது தயார் நிலையில் உள்ள பதவி உயர்வு பேனல் மூலம் நிரப்பாமல், பேனலை முடக்கி வைத்துவிட்டு, இனிமேல் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு செய்து, ஒஒவ்வொன்றாக
தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கி, அந்த பணியை செய்வததை விட, குறைந்த காலத்தில் பதவி உயர்வு வழங்கி துணைமின் நிலையத்தை சிறப்பான முறையில் இயக்கலாம்.
தொடர்ந்து மின் துறை அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் தொடர்பாக முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதை நிறுத்த வேண்டும் உடனடியாக கேங்மேன் பதவியை ரத்து செய்து நீதிமன்ற உத்தரவு படி ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். தற்போது கேங்மேன் பதவி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மின் துறை அமைச்சர் இது குறித்து பேசி வருவது நீதிமன்ற அவமதிப்பாகும் உடனடியாக கேங்மேன் பதவியை ரத்து செய்து விட்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் இதே நிலை நீடித்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *