சேலம் மாவட்ட செய்தியாளர்.
குமரவேல்
சேலம் மாவட்டம் பேளூர் அருகில் உள்ள புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சரவணன்(42). இவர் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் வசித்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துசெல்லப்பட்டது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.