திருப்பூர் நவ 30
அங்கேரிபாளையம் ரேஷன் விற்பனையாளரின் அட்டகாசம் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அடாவடி
போலி ரசீதுகள் போட்டு மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்த பிறகும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் வட்ட வழங்கல் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை
80 லிட்டர் சீமெண்ணையை கடத்தி கள்ளசந்தையில் விற்பனை செய்தது உறுதி செய்து பிறகும் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம்
பெண் விற்பனையாளர் போலி ரசீதுகள் போட்டது உறுயான பிறகும் மூடி மறைத்து அவருக்கு துணை போக சதி
திருப்பூர் போயம்பாளையம் பழனிச்சாமி நகர் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ராஜேஸ்வரி பெண் விற்பனையாளர் பணியாற்றி வந்தார்.
இந்த ரேசன் கடையில் பொது மக்களுக்கு அரிசி, பருப்பு,சர்க்கரை போன்ற ரேசன் பொருட்களை சரிவர வழங்காமல் அலைகழிப்பு செய்து முறைகேடுகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாக கள்ளசந்தையில் விற்பனை செய்து வருவதாக இப்பகுதிகளிலுள்ள பொது மக்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
இந்த ரேசன் கடையில் ரேசன் பொருட்கள் சரிவர வழங்காமல் அலைகழிப்பு செய்து வருவதாக புகார்கள் எழுந்தது.
இதுதவிர அரிசி, சீமெண்ணை உள்ளிட்ட ரேசன் பொருட்களை கடத்தி கள்ளசந்தையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குடியுரிமை வழங்கல் பிரிவு கடத்தல் போலீசில் பொதுமக்கள் சார்பில் ஏராளான புகார்கள் அளிக்கப்பட்டன.
அதன் பேரில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கடந்த மாதம் இந்த ரேசன் கடையில் சுமார் 80 லிட்டர் சீமெண்ணை கடத்தி கள்ளசந்தையில் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது
இந்த நிலையில் பழனிச்சாமி நகர் ரேசன் கடை பெண் விற்பனையாளர் ராஜேஸ்வரி அதிரடியாக அங்கேரிபாளையம் பகுதியிலுள்ள ரேசன் கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தொடர் விசாரணை வட்ட வழங்கல் அதிகாரிகளும் உணவு கடத்தல் தடுப்புச் பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர் தற்போது திருட்டுத்தனமாக சுமார் 80 லிட்டர் சீமெண்ணையை கள்ளசந்தையில் விற்று விட்டு போலி ரசீதுகள் போட்டு மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அதனால் மேற்படி விற்பனையாளர் ராஜேஸ்வரி மீது ரேசன் பொருட்களை கடத்தி கள்ளசந்தையில் விற்பனை செய்தற்கு அபராதம் ரூபாய் 9400 .விதிக்கப்பட்டது. ஏற்கனவே இவர் இதே பிரச்சனையில் பழனிச்சாமி ரேசன் கடையில் இருந்த போது ரூபாய் 2400 அபராதம் விதிக்கப்பட்டது ஆக மொத்தம் ரூபாய் சுமார் 11,800 தற்போது ராஜேஸ்வரிக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ராஜேஸ்வரி மீது துறை ரீதியாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை மேலும் வட்ட வழங்கல் அலுவல விதிகளின்படி ரேசன் கடை விற்பனையாளருக்கு ரூபாய் 5,000 க்கு மேல் அபாரதம் வித்திக்க நேரிட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட விற்பனையாளர் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புச் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்